Map Graph

இலட்சுமிபுரம், கொளத்தூர்

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

இலட்சுமிபுரம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் கொளத்தூர் பகுதியில், 13°08′10.0″N 80°12′01.8″E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கொளத்தூர், விநாயகபுரம், புழல், செங்குன்றம், மாதவரம், பொன்னியம்மன்மேடு, பெரவள்ளூர், செம்பியம், திரு. வி. க. நகர், அகரம், ஜவஹர் நகர், பெரியார் நகர், வில்லிவாக்கம் மற்றும் பெரம்பூர் ஆகியவை இலட்சுமிபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். சென்னையில் வாழ்ந்த ஆற்றல் பெற்ற சித்தர்களில் ஒருவரான அண்ணாமலை சுவாமி சித்தர் இலட்சுமிபுரம் பகுதியில் வாழ்ந்து சமாதி நிலை அடைந்தார். கொளத்தூர் பகுதியில் இயங்கி வரும் 300 வண்ணமீன் வளர்ப்புப் பண்ணைகளில் இலட்சுமிபுரம் மீன் வளர்ப்புப் பண்ணைகளும் அடங்கும். சட்டத்திற்குப் புறம்பாக அதிகாலை முதலே செயல்படும் சில மதுவிற்பனைக் கூடங்கள் இலட்சுமிபுரத்தில் இருப்பதாகக் காவல்துறைக்கு புகார் சென்றுள்ளது.

Read article